மிரட்டலாக உருவாக இருக்கும் பையா 2.! கார்த்தியை ஓரங்கட்டு விட்டு பிரபல நடிகரை தட்டி தூக்கிய லிங்குசாமி.! நடிகை யார் தெரியுமா.?

paiya
paiya

சிவகுமாரின் மகன் கார்த்தி இவரின் திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த திரைப்படம் தான் பையா. பருத்திவீரன் ஆயிரத்தில் ஒருவன் என ஒரு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்தியை ஸ்டைலிஷ் ஆன பையனாக மாற்றியது பையா திரைப்படம் தான் இதற்கு முழு காரணம் லிங்குசாமி தான்.

கார்த்தி தமன்னா கெமிஸ்ட்ரி யுவனின் துள்ளல் இசை என ரசிகர்களை கட்டி இழுத்த திரைப்படம் பையா. இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ட்ராவல்சை மையமாக வைத்து உருவானது. மேலும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது பையா திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்டன இந்த நிலையில் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது பையா திரைப்படம் எப்படி உருவானது என லிங்குசாமி கூறியுள்ளார் அந்த வகையில் கார்த்தியுடன் படம் செய்வதற்கு அவரிடம் லிங்குசாமி கதை கூறியுள்ளார் ஆனால் அந்த கதையில் பெரிதாக கார்த்திக்கு உடன்பாடு இல்லை சார் உங்ககிட்ட ரன் மாதிரியான திரைப்படத்தை எதிர்பார்த்தேன் அதனால் கொஞ்சம் மாடர்ன் ஆன கதையை சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு தான் பையாவோட ஒன்லைன் கதையை கூறியுள்ளார்.

இந்த ஸ்க்ரிப் ரொம்ப புதுசா இருக்கு சார் இதையே பண்ணலாம் என கூறினார் அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கில் இருந்தார் இப்படிதான் பையா திரைப்படம் உருவானது. படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் தெலுங்கு ஹீரோ, ராம்  பொத்னேனி கீர்த்தி செட்டி கூட்டணியில் உருவாகிய திரைப்படம் வாரியர் இந்த திரைப்படத்தில் லிங்குசாமி தான் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் திரைப்படத்தை இயக்குவதற்காக முன்புறமாக இருந்ததாக கூறப்பட்டது ஆனால் கமல் அடுத்ததாக வினோத் இயக்கத்திலும் பா ரஞ்சித் வெற்றி மாறன் என அடுத்தடுத்து இயக்குனர்கள் வரிசை கட்டி இருப்பதால் அதனை முடித்துவிட்டு லிங்குசாமியின் கதைக்கு வருவார் என கூறப்படுகிறது. இதற்கு இடையில் நாமும் ஒரு திரைப்படத்தை இயக்கி விடலாம் என  நினைத்தார் லிங்கு அந்த வகையில் பல கதைகளை தயார் செய்து வைத்துள்ளார் அந்தில் ஒரு கதை தான் பையா.

ஆனால் கார்த்தி தற்பொழுது மிகவும் பிசியாக இருக்கிறார் ராஜமுருகன், நலன் குமாரசாமி, பிரேம் குமார் என பல இயக்குனர் இயக்கத்தில் நடித்த வருவதால் பையா திரைப்படத்திற்குள் அவரால் வர முடியவில்லை அதனால் லிங்குசாமி அடுத்ததாக ஆரியாவை அணுகியுள்ளார். ஏற்கனவே லிங்குசாமி ஆர்யாவை வைத்து வேட்டை திரைப்படத்தை இயக்கியிருந்தார் அதனால் அவர்கள் இருவரிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது அதனால் பையா 2 திரைப்படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினி சுற்றி தான் கதை நகர்கிறது என்பதால் பல கதாநாயகிகளை பலரும் பரிசீலனை செய்தார்கள் ஆனால் தற்பொழுது பூஜா ஹெக்டே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆர்யா மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார் இன்னும் பூஜாவும் படத்திற்குள் வந்து விடுவார் என கூறப்படுகிறது பையா முதல் பாகம் மும்பை வரை பயணித்தது போல் இருந்தது இரண்டாவது பாகம் டெல்லி அல்லது காஷ்மீர் வரை பயணிக்கலாம் எனதகவல் கிடைத்தது. தற்பொழுது கதை விவாதம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.