சமீபகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. அந்த வகையில் பிரபாஸை வைத்து பாகுபலி1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட நிலையில் சிறு இடைவெளிக்குப் பிறகு மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணை வைத்து RRR என்ற படத்தை எடுத்து இருந்தார்.
இந்த படம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தடைகளை சந்தித்து வந்ததால் நீண்டகாலம் படம் வெளியாகாமல் இழுபறியில் இருந்தது ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை காக்க முடியாது என பொங்கி எழுந்த படக்குழு ஒருவழியாக கடந்த 24ம் தேதி படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்தது.
மக்கள் மற்றும் ரசிகர்கள் பாகுபலி படம் போல இந்த படத்தை எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்ததை விட பல படங்கு சிறப்பாக இருந்தது. இந்த படம் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் ஆகியவை வேற லெவெலில் இருந்ததால் மக்களை திருப்திப் படுத்தியது. மேலும் மக்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து அசத்துக்கின்றனர். அவர்களை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் இந்த படத்திற்கு நல்ல கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் RRR படம் நல்ல வசூலையும் கண்டு வருகிறது. உலக அளவில் முதல் நாளில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது. இதுவரை RRR திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 650 + கோடிக்கும் மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இதன்மூலம்வெளியான பாகுபலி1 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ஏற்கனவே வந்த பாகுபலி 1 படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 180 கோடி ஆனால் படம் உலக அளவில் வசூலித்தது சுமார் 650 கோடி என கூறப்படுகிறது தற்போது இந்த படத்தின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது ராஜமௌலியின் RRR.