பகவதி பட வாய்ப்பு கிடைக்காத விரத்தியில் வடிவேலுவை போட்டு தள்ள பார்த்தேன்.. அதிர்ச்சி தகவலை கொடுத்த பிரபல நடிகர்

vadivelu-

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் நாம் நிறைவேற்கு வருவது கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் தான் ஆனால் அவர்களுக்கு அடுத்து பல பிரபலங்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை எல்லாம் நாம் தூக்கி வைத்து கொண்டாட மறந்து விட்டோம்..

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் காமெடி நடிகர் சிசர் மனோகர். இவர் அஜித், விஜய், ரஜினி, கமல் என தொடங்கி பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியன்னாக நடித்து பெயரையும், புகழையும் பெற்றவர் இப்படிப்பட்டவர் தற்பொழுது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா குறித்தும் காமெடி நடிகர் வடிவேலு குறித்தும்..

வெளிப்படையாக பேசுகின்றார் அதில் காமெடி சிசர் மனோகர் சொன்னது. சினிமாவில் வடிவேலுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது நான் தான் மேலும் அவரிடம் நீ சினிமாவில் பெரிய ஆளாக வருவாய் என்று சொன்னேன் ஆனால் வடிவேலு எனக்கே கிடைக்க வேண்டிய பட வாய்ப்புகளை எனக்கு கிடைக்க விடாமல் தடுத்து விட்டார்.

பகவதி படத்தில் இன்னொரு வடிவேலாக நான் தான் நடிக்க இருந்தது. ஆனால் வடிவேலு என்னுடைய இந்த வாய்ப்பை பறித்துவிட்டார் இதனால் கோபத்தில் வடிவேலுவை முடித்திருப்பேன் அந்த நேரத்தில் சீமான் என்னை சமாதானப்படுத்தி அனுப்பினார். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததால் பொறுமையாக இருந்தேன்.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில்  நான் நடிக்க காரணம் சிம்பு தேவன் தான் அந்த படத்தில் கூட நான் நடித்திருந்த பல காட்சிகளை கூட வடிவேலு நீக்கினார்..  இப்படி அடுக்கடுக்காக வடிவேலு பற்றி பல விஷயங்களை அவிழ்த்து விட்டார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.

vadivelu
vadivelu