padayappa : தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினிக்கு போட்டி கமல் என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளார்கள் இது பலருக்கும் தெரியாத தகவல் தான் ஏனென்றால் இன்றைய சமுதாயத்தினர் ரஜினி கமலை போட்டியாளர்களாக தான் பார்த்து வருகிறார்கள். ஆனால் ரஜினி வளர்வதற்கு முன்பு கமல் அதிக சம்பளம் வாங்கியவர்.
அதேபோல் கமல் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி உள்ளது ரஜினி புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். ஆனால் இந்த புகழின் உச்சத்திற்கு காரணம் ஒரு வகையில் கமலஹாசன் என்ற உன்னதமான மனிதரும் இருக்கிறார். கமலஹாசன் ரஜினி வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறார் அதற்கு காரணம் இங்கே காணலாம்.
1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் மியூசிக்கில் வெளியாகிய திரைப்படம் தான் படையப்பா இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினிக்கு வில்லியாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் மறைந்த நடிகை சௌந்தர்யா, சிவாஜி கணேசன், ஆகியோர்களும் நடித்திருந்தார்கள் அது மட்டும் இல்லாமல் லட்சுமி , செந்தில் அப்பாஸ் என பலரும் நடித்திருந்த படையப்பா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
படையப்பா திரைப்படம் வெற்றி பெற கமலும் ஒரு காரணமாக இருந்துள்ளார் அதனை சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது படையப்பா திரைப்படம் 4 மணி நேரம் இருந்ததாகவும் அதற்கு முதலில் ரஜினி இரண்டு இடைவெளி காட்சி வைத்து படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஹிந்தியில் இரண்டு இன்டர்வெல் வைத்து திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது அதே மாதிரி ஏதாவது ப்ரொபஷனலா ட்ரை பண்ணுவோம் என கூறினார்.
பிறகு அடுத்த நாள் போன் செய்து கமல் சாரிடம் கேட்டேன் நீ என்ன பைத்தியமா தமிழ் சினிமாவிற்கு அது ஒத்து வருமா நீ அவரிடம் சொல்லி 13 ரில் சொல்லு கடைசியா 14 ரீல் கொண்டு வருவார் என ரஜினி கே எஸ் ரவிக்குமார் அவர்களிடம் கூறியுள்ளார் உடனே ஒரு எபிசோடையே படையப்பா திரைப்படத்தில் நீக்கியதாக கேஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.