1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் படையப்பா இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் 1996 இல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் பலரைக் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது நீலாம்பரி கதாபாத்திரம் தான், இன்றும் நிலம்பரி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் அடையாளம் என்று கூறலாம், அந்த அளவு ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் அழுத்தமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.
நீலாம்பரி கதாபாத்திரம் பெண்கள் ஆண்களுக்காக தலை குனியாமல் ஆணவத்துடன் இருப்பதுபோல் கதாபாத்திரம் அமைந்திருக்கும், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது மீனா தானம். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் மீனாவை தான் அணுகினார்கலாம். ஆனால் பெண்ணாதிக்கம் செய்வது போன்ற கதாபாத்திரம் மீனாவுக்கு செட்டாகவில்லை.
மீனா ஆக்ரோஷமாக கோபப்பட்டாலும் குழந்தை போல் தான் இருந்ததாம் அதனால்தான் மீனா வேண்டாம் என்று இந்த திரைப்படத்தில் இருந்து ஒதுக்கி விட்டார்களாம் பின்பு ரம்யா கிருஷ்ணனை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்களாம், அதுமட்டுமில்லாமல் மீனாவிற்கு முன்பு நக்மாவிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேசினார்களாம் இவர்கள் இருவரும் ஒத்துப் போகாததால்.
இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளன. ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.