Rajini padayappa: கே எஸ் ரவி குமார் இயக்கத்தில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் படையப்பா இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் என பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.
1996 இல் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் வசூலை படையப்பா வசூல் முறியடித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, இன்னும் பலருக்கு நிலாம்பரி நடிப்பு பிடிக்கும்.
இந்தநிலையில் படையப்பா திரைப்படம் 1999 லேயே சுமார் 60 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது, மேலும் தமிழகத்தில் மட்டும் 30 கோடி வரை வசூல் செய்தது அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் 13 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த திரைப்படம் வெளியாகி இருபது ஒரு வருடத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.