படையப்பா பாடலில் பாசமுள்ள குழந்தையப்பா இது மீசை வச்ச குழந்தையப்பா என்ற பாடலில் வரும் இந்த குழந்தை இப்பொழுது பிரபல சீரியல் நடிகை பார்த்தீர்களா.!

சினிமாவைப் பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் ஆரம்பகட்டத்தில் நடித்துள்ளார்கள் அவர்கள் படிப்படியாக ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று முன்னணி நடிகை மற்றும் நடிகராக வளம் வந்துள்ளார்கள் அந்தவகையில் கமலஹாசன் ஷாலினி, சிம்பு, ஹன்சிகா என பல நடிகர் மற்றும் நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நடிகைகளாக ஜொலித்து வருகிறார் பல நடிகைகள், அதில் ஒரு சில நடிகைகள் சீரியலிலும் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படத்தில் என் பேரு படையப்பா பாடலில் பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வச்ச குழந்தையப்பா என்ற பாடல்வரி வரும் பொழுது ஒரு குழந்தையின் முகம் வந்து போகும் அவர் வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகை சஹானா தான்.

இவர் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டு வந்த இதயத்தை திருடாதே என்ற தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹீமா பிந்து இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமார் நடித்து வருகிறார். இந்த தொடர் மராத்தி தொடரை தழுவி எடுக்கப்பட்டது.

padaiyappa-child
padaiyappa-child

இந்த தொடரின் மையக்கருத்து இரண்டு அரசியல்வாதிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு சிவா மற்றும் சஹானா இருவரின் காதல் கதைதான். இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு சில மாதங்கள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது ஆனால் கொரோனா காலகட்டத்தில் திடீரென சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டது. இவர்களின் நடிப்பில் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டாவது சீசன்  ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நடிகையின் சொந்த ஊர் ஆந்திரா இவரின் மொத்த குடும்பமும் சினிமா கலைத்துறையை சேர்ந்தவர்கள் அதனால்தான் இவருக்கும் சினிமா மீது அதிக ஆசை வந்துவிட்டது இவர் தற்பொழுது வளர்ந்து நடிகையாக நடித்து வருகிறார் சீரியலில்.

padaiyappa-child
padaiyappa-child

Leave a Comment