2007ஆம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம், இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரத்குமார் ஒரு மருந்து கம்பெனியில் பணியாளராக இருக்கிறார்.
இவருக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் ஒரு காலகட்டத்தில் தனது மகனுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதனால் சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இன்சுலின் ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் சரத்குமார் வழக்கமாக செல்லும் ரயிலில் ஜோதிகாவை பார்க்கிறார் இவர்களுக்கு இருவருக்கும் காதல் மலர்கிறது இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை, இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் ஒரு காரணம் என்று கூறலாம்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக சிம்ரனை தான் நடிக்க உறுதி செய்தார்களாம், ஆனால் சிம்ரன் ஒரு காலகட்டத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டார் அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஜோதிகா பொருத்தமாக இருப்பார் என்று கௌதம் வாசுதேவ முடிவு செய்து ஜோதிகாவை அணுகினாராம்.
சிம்ரன் அந்த படத்தில் நடக்காததற்கு கால்ஷீட் தான் காரணம் ஏன் என்றால் சிம்ரன் அப்பொழுது வாரணம் ஆயிரம் திரை படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஜோதிகா தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்து வெற்றிபெற்றார் அதைப்போல் சரத்குமார் குடும்பத் தலைவனாக தனது சிக்கல்களை முறியடித்த அதிலிருந்து எப்படி மீண்டும் வருகிறார் என்பதை தத்ரூபமாக இந்த திரைப்படத்தில் காட்டியிருப்பார் கௌதம் மேனன்.
இந்த திரைப்படம் உண்மை கதைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது என பேட்டியில் கௌதம் மேனன் கூறியிருப்பார்.