பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ராஜி திருச்சிக்கு கண்ணனை தேடி சென்றுள்ளார். போன இடத்தில் கண்ணன் இல்லை, உடனே ராஜி அவரது பிரண்டிடம் விசாரித்ததில் அவன் பெங்களூரில் இருக்கிறான் என தெரிய வந்தது. அதுவும் சரியாக தெரியவில்லை என அவரது நண்பர் சொல்ல உடனே திருச்சியில் உள்ள இன்னொரு நண்பரின் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
அவரோ கண்ணன் துபாய் போவதாகல்ல சொன்னான். அவன் இந்நேரம் துபாய் போயிருப்பாம்மா என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அதற்கு ராஜி அவன் என்னை ஏமாத்தி வீட்டுல இருந்து அழைச்சிட்டு போய் நடு ரோட்டில் இறக்கி விட்டுட்டு என்கிட்ட இருந்த பணம் நகை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிப் போயிட்டான்.
எனக்கு இப்ப கதிரோட கல்யாணம் ஆயிடுச்சு எங்க வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு அந்த நகை, பணத்தை கேட்டு கதிர எங்க அண்ணன் அடிச்சிட்டான். எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு எந்த தப்பும் செய்யாத கதிர் தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கான். அந்த நகையும் பணத்தையும் அவன்கிட்ட இருந்து மீட்டுக்கொண்டு கொடுத்து கதிர அந்த குறைந்தபட்ச அவமானத்திலிருந்து நான் காப்பாத்தணும்னு நினைக்கிறேன் என சொல்லி அழுகிறார்.
இதற்கிடையில் மீனாவும் அரசியும் வீட்டுக்கு வருகின்றனர். கோமதி இன்னும் ராஜி வரவில்லை என சொல்கிறார். அதற்கு அரசியோ அவங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் கிளாஸா இருக்கும் கண்டிப்பா வந்துருவாங்க என கூறுகிறார். நேரமாகியும் வரவில்லை உடனே கோமதி பயந்து அனைவருக்கும் போன் பண்ணி வர சொல்லுகிறார். அவர்கள் வந்ததும் ராஜ் இன்னும் வரவில்லை மணி 7:30 ஆயிடுச்சு எனக்கு பயமா இருக்கு என கோமதி கூரி அழுவுகிறார்.
உடனே கோமதியின் தம்பி பழனி இவன் இன்னைக்கு காலைல கூட அந்த புள்ள கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தான். அதான் அந்த புள்ள கோவத்துல எங்க போறதுன்னு தெரியாம எங்கேயோ போயிடுச்சு போல என சொல்கிறார். உடனே அனைவரும் ராஜியை தேட செல்கின்றனர்.
ராஜி அழுதபடியே அவரது தோழியுடன் ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறாள். அப்போது மணி எத்தனை என பாக்குற மணி 5 ஆயிடுச்சு என்ன காணும்னு வீட்ல எல்லாம் தேடுவாங்க வா சீக்கிரமா போகலாம் என கூறுகிறாள்.
அந்த சமயத்தில் அங்கு சரவணன், செந்தில், பழனி, கதிர் என அனைவரும் ரோட்ரோடு ஆக தேடி அலைகின்றனர். அதிலும் குறிப்பாக கதிர் நடந்தபடியே தேடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.