பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ராஜி பிலிம்ஸ் போட்டுக் கொண்டிருந்தபோது கோமதி கூப்பிட்ட உடனே அந்த ஃபிலிம்ஸ் போட்ட நோட்டை அப்படியே வைத்து விட்டு செல்கிறாள். அந்த நேரத்தில் கதிர் காலேஜுக்கு விறுவிறுப்பாக கிளம்பி கொண்டிருக்கும் போது ராஜி போட்ட ஃபிலிம்சை பார்த்து சந்தோஷப்பட்டு அந்த நோட்டை எடுத்து செல்கிறான்.
அதன் பிறகு கோமதி பாண்டியனிடம் இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி சாப்பாடு செஞ்சு வைக்கிறேன் வீட்டுக்கு வந்துருங்க என கூறினால். அதற்கு பாண்டியன் எனக்கு புடிச்ச மாதிரி சாப்பாடு செய்வது எல்லாம் ஓகே ஆனா வீட்டுக்கு வர முடியாது அதுக்கு தான் மயிலு சாப்பாடு எடுத்துட்டு வந்துருது என கூறினான்.
உடனே ஆத்திரமடைந்த கோமதி மயில் எல்லாம் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர மாட்டாள். இனிமேல் நீங்க வீட்டுக்கு வந்து தான் சாப்பிடணும் என கோமதி காரராக கூறினார். அதற்கு பாண்டியன் மயில் சாப்பாடு எடுத்துட்டு வறதுல உனக்கு என்ன பிரச்சனை என கேட்டான் அதற்கு கோமதி மயில் சாப்பாடு எடுத்துட்டு வறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா ஊரு கண்ணு பட்டுருச்சுன்னா குடும்பத்துக்கு நல்லது இல்ல ஊரு கண்ணு பொல்லாதது என பாண்டியனை சமாளிக்கிறாள்.
உடனே பாண்டியன் நீ ஏதாவது பண்ணு என்று கடைக்கு கிளம்பி விடுகிறான் அதன் பிறகு கோமதி, மீனா, ராஜி மூவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள அந்த சமய்தில் மயில் சரவணனுக்கும் பாண்டியனுக்கும் சாப்பாடு எடுத்து வருகிறாள். இதை பார்த்த கோமதி மயிலை பார்த்து நீ இனிமேல் சரவணனுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துக்கொண்டு போ என் புருஷனுக்கு நான் பாத்துக்குறேன் என மயிலை ஒரு அதட்டு அதட்டினால்.
அதற்க்கு மயில் மாமா தான் என்ன சாப்பாடு எடுத்துட்டு வர சொன்னாரு என பதிலுக்கு பேசி முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை அதற்கு கோமதி ஒரே வார்த்தையாக சரவணனுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துட்டு போன எடுத்துட்டு போகணும் என கூறியதும் அழுது கொண்டே சரவணனுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துச் சென்றால் மயில்.
சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்லும்போது தனது அம்மாவுக்கு போன் செய்து அங்கு நடந்ததை கூறி என்னால வாழ முடியாது என அழுதாள். அதற்கு மயிலின் அம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் மயிலின் அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுகிறாள்.
அந்த சமயத்தில் பாண்டியனும் வீட்டிற்கு வரவே அவரிடம் இல்லாத பொல்லாதது எல்லாம் ஏத்தி விடுகிறாள். அது மட்டும் இல்லாமல் மயிலையும் மாப்பிள்ளையையும் எங்காவது வெளிய அனுப்பி விடலாம் என முடிவெடுத்திருக்கும் நீங்க என்ன சொல்றீங்க சம்மந்தி என கேட்டால்.
அதற்கு பாண்டியன் இந்த மாதம் சரவணனுக்கு வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு அடுத்த மாசம் பாத்துக்கலாம் என கூறினான். வந்ததற்கு வத்தி போட்டு விட்டு சென்றுவிட்டால் மயிலின் அம்மா. அதன் பிறகு கோமதி பாண்டியனை பார்த்து நீங்கள் வீட்டிற்கு தான் சாப்பிட வரணும் என கரராக கூறிவிட்டாள். அதற்கு பாண்டியன் நீ ஏதாவது செய் எனக்கூறி விட்டு சாப்பிடு சென்று விட்டான். தான் ஒரு முழு மாமியாராக மாறியதை மீனா விடமும் ராஜி இடமும் சைகையால் காட்டிக்கொண்டு தன்னைத் தானே பெருமை படுத்திக் கொண்டால் கோமதி. இத்துடன் பாண்டியன் ஸ்டோர் இன்று எபிசோட் முடிகிறது.