சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்பீம் இந்த திரைப்படமானது அமேசானில் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது.
அந்த வகையில் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது மேலும் இத்திரைப்படத்தை ஒரு சிலர் கொண்டாடினாலும் ஒரு சில தரப்பினர் இந்த திரைப்படத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். அந்த வகையில் சூர்யாவை நேரில் சந்தித்த பா ரஞ்சித் அவர்கள் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு பற்றி ஒரு படம் எடுக்கணும் அதற்காகத்தான் உங்களிடம் வந்துள்ளேன் என கூறியுள்ளாராம்.
நடிகர் சூர்யா இந்த கதையை கேட்டு ஆச்சரியம் ஆனதுமட்டுமில்லாமல் அந்த சப்ஜெக்ட் எல்லாம் ரொம்ப ரிஸ்க் இருக்கும் சார் என கூறியுள்ளாராம் பின்னர் ரஞ்சித் அவர்கள் இந்த முழு கதையையும் கேட்டுவிட்டு சொல்லுங்கள் என கூறினாராம்.
அந்தவகையில் இந்த கதையில் வைத்தியநாத ஐயருக்கு வட்டி கடை வச்சிருக்கிற எல்லாருக்கும் பெரிய தொழில் விரோதம் ஆகையால் எப்படியாவது ஒருவருக்கு ஒருவர் போட்டுத் தள்ளிவிட்டு முன்னிலையில் வர வேண்டும் என நினைப்பார்கள் இதனைக் கேட்ட சூர்யா நல்லாதான் இருக்கு சொல்லுங்க என்றாராம்.
பிறகு வைத்தியநாத ஐயர் கறிக்கடை காதரை கூப்பிட்டு நீங்கள் ராம் லால் சேட் வீட்டில் பாம் வைக்கணும் என கூறியிருந்தார் ஆனால் நான் ஈ எறும்புக்குக் கூட துரோகம் செய்வதில்லை என்று முடியாது என கடைக்காரர் சொல்லிவிட்டாராம் இதனால் வைத்தியநாத ஐயர் உன் குடும்பத்தை நான் அழித்து விடுவேன் என மிரட்டியதால் அவர் சம்மதம் தெரிவித்தாராம்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பாம்களை தயாரித்து தனது வீட்டு வேலைக்காரன் முனியன் இடம் கொடுத்த வைக்கிறார். ஓ அப்படி என்றால் ராமலிங்கம் வீட்டில் அக்னிசட்டி காலண்டர் வச்சுக்கணும் வீட்டு வேலைக்காரன் முனியனுக்கு அம்பேத்கார் பனியன் போடணும் அதானே..
பிறகு சூர்யா கதை ஓகே உங்கள் படத்தின் தலைப்பு என்ன என்று கேட்டார். ஜெய் பாம் இவ்வாறு ரஞ்சித் கதை கூரியதாக ஒரு கற்பனை கதை சமூக வலைதள பக்கத்தில் பரவி வருகிறது.