சினிமாவில் எடுத்தவுடனேயே ஒரு இயக்குனரும் நடிகரும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியாது அதற்கு முன்பு ஏதாவது ஒரு படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடித்திருப்பார்கள். அப்படித்தான் திரையுலகிற்கு வந்து இருக்க முடியும் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தற்போது அசைக்க முடியாத இயக்குனரான பார் ரஞ்சித். பலமுறை இந்த திரைப்படத்தை பார்த்திருப்போம் ஆனால் இவர் அந்த படத்தில் நடித்தாரா என்ற கேள்வி நம்முன் உள்ள கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் நெட்டிசன்கள் இதை கண்டுபிடித்து தற்போது ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். மேலும் வெங்கட்பிரபுவின் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர் தான் இயக்குனர் பா ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அவரே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இவரிடமிருந்து வெளிவந்த பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் உச்ச தரமான ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற ஹிட் படங்களை கொடுத்ததால் தற்போது திரையுலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் மேலும் தற்பொழுது ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவையும் தாண்டி சில சர்ச்சையான பேச்சால் தற்பொழுது வம்புக்கும் வந்துள்ளார் பா ரஞ்சித்.
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது பிரதான தொழிலான சினிமாவையே தற்பொழுது கவனித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஆம் பெயராக நின்று பணிபுரிந்துள்ளார்.
அந்த படத்தில் அதை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை கவனிக்கவில்லையே அந்த படத்தில் அவர் நடித்த காட்சியை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு உள்ளனர் இதை நீங்களே பாருங்கள்.