நடிப்பிற்கு பெயர் போன சியான் விக்ரம் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார். இவர் கையில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான்..
காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக மிரட்டி உள்ளாராம் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது அதே சமயம் கோப்ரா திரைப்படத்தில் ஏழு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா ரஞ்சித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார் அண்மையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது பூஜையின் பொழுது பா ரஞ்சித், விக்ரம், சிவகுமார் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சீயான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாக இருக்கின்ற திரைப்படம் உண்மையில் 1800 காலகட்டங்களில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் என சொல்லப்படுகிறது ஒரு பக்கம் கேஜிஎப் படத்தின் உண்மை கதையை எடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையை கமெண்ட் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிரபல நடிகை வேறு யாரும் அல்ல ராஷ்மிகா மந்தனா தான் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதை முடித்துவிட்டு நடிகர் விக்ரமுடன் இந்த படத்தில் ஜோடி சேருவார் என சொல்லப்படுகிறது.