விக்ரமுடன் இணையும் பா ரஞ்சித் – அந்த படம் எந்த மாதிரியான கதை தெரியுமா.? தெரிஞ்ச நீங்க ஷாக்காவிங்க.. வைரல் நியூஸ்.

vikram-and-pa-ranjith
vikram-and-pa-ranjith

தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு டாப் நடிகர்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

ரஜினியை வைத்து காலா, கபாலி படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்னும் மிரட்டலான ஒரு படத்தை எடுத்திருந்தார் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசும் படமாக இருந்து வருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது திரைப்படங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார் அதை முடித்த கையோடு இவர் ஏற்கனவே ஒரு கதையை சொல்லி வைத்திருந்த நிலையில் அதை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது

அந்த படத்தின் கதைக்கு ஓகே சொல்லி இருந்தாலும் தற்போது விக்ரமுக்கு பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்ததால் இந்த கூட்டணி அமையாமல் இருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் பா.ரஞ்சித் மற்றும் விக்ரமும் இணைந்து அத்திரைப்படத்தில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ கதை என கூறப்படுகிறது. இந்த கதையை நடிகர் சீயான் விக்ரமுக்கு சொல்வதற்கு முன்பாக விஜய்க்கு சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.