நடிப்பிற்கு பெயர் போன சீயான் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இருப்பினும் இவரது படங்கள் வெற்றியை ருசிக்க தவறுகிறது. தற்பொழுது வெற்றிக்காக ஏங்கி கொண்டிருக்கிறார் அதை தீர்க்கும் வகையில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
குறிப்பாக விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் மிரட்டி இருக்கிறார் அதை டீசரில் கூட பார்க்க முடிந்தது. இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபாக்கம் இந்த படங்களை தாண்டி சியான் விக்ரம்.
அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் பா ரஞ்சித்துடன் விக்ரம் இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பா ரஞ்சித் விக்ரம் இணையும் அந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றன.
பா ரஞ்சித் விக்ரம் இணையும் இந்த படத்தின் கதை 1800 காலகட்டத்தில் நடந்த கதை என கூறப்படுகிறது. இந்த படம் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் பூஜையின் போது பா ரஞ்சித்துடன் விக்ரம், சிவக்குமார், ஜிவி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்தப் படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன் தயாரிப்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார்.
இந்த படமும் 3டியில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நிச்சயம் சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என இப்பவே சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு முன்பாக விக்ரமின் பொன்னியின் செல்வன் கோப்ரா ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.