பா. ரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்..! ஹீரோவை கூட மாத்துவாரு.. அந்த நடிகரை விடவே மாட்டாராம்.

pa-ranjith-
pa-ranjith-

இயக்குனர் பா ரஞ்சித் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவரது படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம்பெறுகின்றன இதனால் மக்களுக்கு ரொம்பவும் இவரது படங்கள் பிடித்து போய் உள்ளன. பா ரஞ்சித் முதலில் அட்டகத்தி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

ஏன் அண்மையில் கூட இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்ததோடு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த படமாக மாறியது இந்த படங்களை தொடர்ந்து இப்பொழுது நட்சத்திரம் நகர்கிறது என்னும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுடன் ஒரு படம் மற்றும் கமலுடனும் ஒரு படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பா ரஞ்சித் புதிய புதிய நடிகர்களுடன் கைகோர்த்தாலும் ஒரு நடிகரை மட்டும் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் கலையரசன்.

இவர் பா ரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் பா ரஞ்சித் இயக்கிய 6 படங்களிலும் கலையரசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலையரசனும் தனது திறமையை காட்ட தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் இவர் திறமை ரசிகர்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு ஏற்ற  வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் அவரது சினிமா கேரியரை மாற்றியமைக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர் ஏனென்றால் இந்த படமும் ஒரு வித்தியாசமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

kalaiyarasan
kalaiyarasan