பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!!. வழக்கம் போல தானா இல்ல புதுசா ஏதாவது இருக்குமா…

ranjith
ranjith

pa.ranjith movie update: பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமடைந்தார், கபாலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் ரஜினியை வைத்து காலா என்ற திரைப்படத்தை இயக்கி பேரும் புகழும் பெற்றுக்கொண்டார்.

என்ன தான் பா ரஞ்சித் திரைப்படம் வெற்றி பெற்றாலும் அவருக்கு ஏதாவது ஒரு விமர்சனம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது, ஏனென்றால் தான் இயக்கும் திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் என பிரித்து காட்டுவது ரசிகர்களிடமும் மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

இதனை சினிமா பிரபலங்களும் பலமுறை கருத்து தெரிவித்து விட்டார்கள் ஆனால் ரஞ்சித் திருந்திய பாடு இல்லை அந்த நடையில் ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியது.

இந்த திரைப்படத்தின் கதை வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார் என அனைவருக்கும் தெரியும்.

மேலும் இந்த திரைப் படத்தில் நடிப்பதற்காக ஆர்யா கரடுமுரடாக தனது உடலை ஏற்றி உள்ளார், அதன் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா என்ற நடிகை நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யாவின் சல்பேட்டா திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் முப்பதாவது திரைப்படமாக அமைந்துள்ளது அதனால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் கலையரசன் ஆகியோர் நடித்து வருகிறார்கள.