“கபாலி” படத்தின் விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை.. ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – பா. ரஞ்சித் பேட்டி.!

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித்தும் சும்மா சொல்லிவிடக்கூடாது சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் முதலில் அட்டகத்தி என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்னும் படத்தை எடுத்தார் அந்த படமும் இவருக்கு வேற லெவல் வெற்றியை பெற்று தந்தது இந்த படத்தை பார்த்துவிட்டு பல நடிகர்கள் பாராட்டுவதை விட கதை சொல்லவும் வர சொன்னனர். அந்த அளவிற்கு பா ரஞ்சித் மார்க்கெட் அதிகரித்தது.

அதிலும் குறிப்பாக ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார் அப்படித்தான் கபாலி, காலா என ரஜினியை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி அசத்தினார். இதன் பின்னர் சார்பட்டா இப்போ நட்சத்திரம் நகர்கிறது என்னும் படத்தையும் இயக்கி உள்ளார் அந்த படம் வெளிவர இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார். மெட்ராஸ் படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு ரஜினி எனக்கு போன் செய்து பாராட்டிவிட்டு படம் பண்ண கூப்பிட்டார் அப்படித்தான் காலா பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது காலா படத்தை நான் இயங்கினேன் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தயாரிப்பாளர் எஸ் கலைப்புலித்தானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இருந்தாலும் இயக்குனரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என அவர் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார் படம் வெளிவந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

சினிமா இண்டஸ்ட்ரியில் யாருமே படத்தை பார்த்துவிட்டு பாராட்டவே இல்லை அது தான் எனக்கு ரொம்ப மன உளைச்சலுக்கு தள்ளியது ஆனால் கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு வந்து அந்த இடத்தில் இவ்வளவு வசூல் இந்த இடத்தில் இவ்வளவு வசூல் என ஒரு பெரிய லிஸ்ட் காட்டினார். நீ எதை பற்றியும் கவலைப்படாதே என சொன்னார் அப்படி ஒரு தயாரிப்பாளரை நான் பார்த்ததே கிடையாது என பா ரஞ்சித் கூறினார்.