கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகுவதும், இயக்குனர் ஹீரோ அவதாரம் எடுப்பதும் வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் காமெடி நடிகர் சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் முதலில் வில்லனுக்கு அடியாள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து..
வந்த இவர் வெண்ணிலா கபடி குழு தான் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோகளுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் அண்மை காலமாக தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத படங்களே இல்லை அந்த அளவிற்கு இவருடைய வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தான் காமெடி நடிகர் சூரிக்கு அதிர்ஷ்டமும் அடிக்க ஆரம்பித்துள்ளது முதலில் வெற்றிமாறன் விடுதலை படத்தில் ஒரு முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இந்த படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதனைத் தொடர்ந்து விடுதலை பார்ட் 2 திரைப்படத்திலும் நடிகர் சூரி மிரட்டி உள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன இது இப்படி இருக்க சிவகார்த்திகேயனுடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் இவருக்கு வெயிட்டான கதாபாத்திரம் என கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் வழக்கமாக சூரி 30 லட்சம் தான் சம்பளம் வாங்குவாராம் ஆனால் விடுதலை திரைப்படம் 1,2 என நடித்து உள்ளதால் மொத்தமாகவே சேர்த்து 40 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர்.