வாரிசை பந்தாடிய அஜித்தின் துணிவு திரைப்படம் – 3 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

thunivu
thunivu

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் பொங்கலை முன்னிட்டு 11ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

படம்  பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் முதல் பாதி ரசிகர்களுக்கானதாக இருந்தது இரண்டாவது பாதியில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை சொல்லும் விதமாக படம் இருந்தது இதனால் இளம்பட்ட ரசிகர்கள் தொடங்கி முதியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு படம் வெளியானது ஆனால் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இருப்பினும் வசூலில் அஜித்தின் துணிவுக்கு நிகராக வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வந்திருக்கிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் சுமார் 43 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதை விட வாரிசு கம்மி வசூல்..

வருகின்ற நாட்களில் துணிவு படத்தின் வசூல் அதிகரிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அஜித்தும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் போன்றவர்களை அழைத்து ஒரு சின்ன பார்ட்டி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.