oviya tweet viral: ஓவியா அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நடிகைதான். இவர் ‘களவாணி ‘படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். களவாணி படத்திற்கு பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் நடித்த பின்புதான் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய தெளிவான பேச்சும் , ஒளிவு மறைவு இல்லாத குணமும் தான் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக இவர் வேற லெவல் ட்ரெண்டிங் ஆனார்.
ஓவியா அவர்கள் திரைப் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். அவர் இன்னமும் கூட ஃபுல் பினிஷ்டா ஒரு படம் கூட நடிக்கவில்லை. இருந்தாலும் இவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே ரொம்ப பிசியாகாத்தான் உள்ளார். சமீப காலத்தில் ஆரவ்வோட என்கேஜ்மென்ட் மற்றும் மேரேஜ் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்தது.
ஏனென்றால் ஓவியாவிற்கும் ஆரவிற்கும் காதல் தொடர்பு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டன. ஓவியா அவர்கள் தன்னை பற்றி பல தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் பதி விட்டுக் கொண்டே இருப்பார். ஓவியாவிற்கு உடம்பில் டாட்டூ போடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் சமீபத்தில் தனது காலில் ஒரு பாம்பு சுற்றுவதை போன்ற டாட்டூவை வரைந்துள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
இந்த டாட்டூவிற்கு பின்னால் ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று பல ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஓவியாவின் காலைச் சுற்றிய பாம்பு இந்த டாட்டு மறைமுகமாக ஆரவை சுட்டி காட்டுகிறது என ரசிகர்கள் கூறுகின்றார்.ரசிகர்களால் பல கமெண்ட்ஸ் -ம் போடப்பட்டு வருகின்றன. திரையுலகில் ஓவியா அவர்கள் மிக விரைவாக பல படங்களை நடிக்க வேண்டும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருகின்றன.