கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு அப்படி சிறந்து விளங்கும் அத்தகைய ஜாம்பவான்களுக்கு ஈடு இணையாக வளர்ந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. இந்தியாவில் சச்சின், கங்குலி பிறகு சிறந்த திறமை கொண்ட வீரராக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி.
இவர் கிரிக்கெட் உலகிலும், வாழ்க்கையிலும் சரி மிக பொறுமையாக அவசரப்படாமல் ஒரு முடிவையும் நிதானமாக கெடுக்கக் கூடியவர் மகேந்திர சிங் தோனி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் இந்திய அணிக்காக பல கோப்பைகளை கைப்பற்றி உள்ளார் அந்த வகையில் இவர் உலக கோப்பை ,T20 மற்றும் ஆசிய கோப்பை என பல கோப்பைகளை வாங்கி நமக்கும் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் மேலும் பல திறமையான வீரர்களைகிரிக்கெட் உலகிற்கு கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இவர் ரோகித் சர்மா, ஜடேஜா போன்ற இந்திய அணிக்கு கொடுத்துள்ளார். இப்படி சிறப்பாக இருந்து வந்த தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் அதன்பின் ஒருநாள் போட்டியில் விளையாடி வந்து கொண்டிருந்த தோனி கடைசி உலகக்கோப்பை உடன் தனது போட்டியை முடித்துக் கொண்டார் அதன் பின் ரசிகர்கள் மற்ற போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி விளையாடாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
வந்தது மீண்டும் அவர் இந்திய அணிக்காக ஏதேனும் ஒரு போட்டியில்லாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மகேந்திர சிங் தோனி. இது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இதனையடத்து சுரேஷ் ரெய்னா அவர்களும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒரே நாளில் இரண்டு ஜாம்பவான்கள் வெளியானது மிகப்பெரிய பின்னடைவு தான் என பலரும் கூறிவருகின்றனர். இருப்பினும் மறுபக்கம் ஓய்வுபெற்ற தோனி மற்றும் ரெய்னா அவர்களுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில்தான் ஓய்வு பெற்றார் தோனி குறித்து விஜயகாந்த் அவர்கள் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டது தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் டையும் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியாற்றியத்தையும் தமிழ் மக்கள் என்றும் நினைவு கொள்வார்கள் கேப்டன் தோனி ஸ்கூல் அண்ட் கிரேட்கேப்டன் என்று பதிவிட்டார்.