சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த நடிகர்களின் படங்களை ஓடிடி தளங்கள் வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு பெரும் தொகையை அளித்து வருகிறார்கள் இது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது தற்பொழுது எல்லாம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகுவது வழக்கமாக இருந்து வருகிறது இவ்வாறு இந்த பழக்கம் கொரோனா காலகட்டத்தில் ஆரம்பித்த நிலையில் தற்போது அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் பார்த்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்கள் பெரும் பலமாக இருந்து வருகிறார்கள் உதாரணமாக நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர்ந்து ஓடிடி தளங்கள் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதற்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் பெரும் தொகைக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் விற்கப்பட்டு வருகிறது அதன்படி தற்பொழுது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு, மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு படங்களையும் ஒரே ஓடிடி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா அவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் போன்ற படங்களின் உரிமையை மற்றொரு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை இன்னொரு நிறுவனம் பெற்றுள்ளது. இவ்வாறு அனைத்து ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.