தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் எண்ணற்ற படங்கள் வெளியாகின்றன அதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றன என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் அதிலும் ஒரு சில திரைப்படங்களும் கதைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த OTT யில் வெளியாகின்றன என்பதை இங்கே காணலாம்.
ஆடு ஜீவிதம் : மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற நாவல் தி கோட் லைப் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நாயகனாக பிரித்விராஜும் நாயகியாக அமலாபாலம் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பலமொழிகளில் வெளியானது மேலும் நெட் பிலிக்ஸ் இணையதளத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஆகா தமிழ் OTT இணையதளத்தில் நாசர் தலைவாசல் விஜய் வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக வெளியான தி அக்காலி திரைப்படம் வெளியாகி உள்ளது.
வாணி போஜன் விதார்த் ஆகியோர் நடிப்பில் நீட் தேர்வை மையமாக வைத்து அஞ்சாமை என்ற திரைப்படம் சிம்ப்ளி சவுத் என்ற OTT இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
அதேபோல் புது முகங்கள் நடிப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ரயில் இந்த திரைப்படம் வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்கள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த திரைப்படம் டென்ட் கொட்டா என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஆர் கே சுரேஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகிய காடுவெட்டி திரைப்படம் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விதார்த் நடிப்பில் லாந்தர் என்ற திரைப்படம் சிம்ப்ளி சவுத் என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.