காலங்கள் போகப்போக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா உலகமும் முன்னேறியது ஆனால் தென்னிந்திய சினிமா உலகில் அதலபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை மீட்டெடுக்கும் வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.
படம் வெளியாகி இந்திய அளவில் பேசப்பட்டது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிக பிரமாண்ட வசூலை அள்ளியது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமும் அதிரடியாக எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 14 ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது முந்தைய படத்தைவிட இந்த படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் வசூலில் புதிய ருத்ரதாண்டவம் ஆடியது இது வரை மட்டுமே படம் 1200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 50 நாட்களுக்கு மேல் கடந்து திரையரங்கில் கேஜிஎப் 2 திரைப்படம் ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர்.
இந்த சமயத்தில் கே ஜி எஃப் 2 திரைப்படம் OTT தளம் பக்கம் திசை திரும்பி உள்ளது ஆம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. கே ஜி எஃப் 2 OTT தளத்திலும் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.