OTT யில் போனி ஆகாமல் இருக்கும் 4 திரைப்படங்கள்.! அட தலைவன் படத்துக்கே இந்த நிலைமையா.?

movie
movie

சமீப காலங்களாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ottயில் நல்ல விலை போகிறது. அப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான விக்ரம் திரையுடம் ottயில் நல்ல லாபத்தை பார்த்தது. இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சரியாக ஓடாததால் ott தளத்தில் விலை போகாமல் இருக்கும் நான்கு படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தி லெஜன்ட் :- இயக்குனர் ஜே டி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடித்திருக்கும் திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் ottயில் தற்போது வரை விலை போகாமல் உள்ளது.

கேப்டன்:- சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்ய லட்சுமி, சிம்ரன், நடிப்பில் வெளியான  கேப்டன். இந்த படம் வெளியாகி செலவு செய்த பட்ஜெட் கூட எடுக்க முடியாமல் போனது. இதனால் இந்த படத்தை மிகக் குறைந்த விலைக்கு  ஜீ5 ஓ டி டி தளம் கைப்பற்றியது.

இரவின் நிழல்:- நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்திற்கு பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர் ஆனால் இந்த படம் இன்று வரையிலும் ottயில் விலை போகாமல் உள்ளது.

கோப்ரா :- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படம் வெளி வருவதற்கு முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்த என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களை பெற்றது இதனால் இந்த படத்தை எந்த ஒரு ott தளமும் வாங்க முன் வரவில்லை.