சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ஒரு ஆசை நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அதற்காக அயராது பாடுபடுகின்றனர் ஆனால் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி இருப்பினும் அந்த இடத்திற்கு அஜித் விஜய் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.
கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இந்த இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்று தான் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இரண்டு படங்களுமே ரசிகர்கள் மற்றும் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனால் இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூலை அள்ளியது.
அஜித்தின் துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 260 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது இந்த படங்களை தொடர்ந்து இதே ஆண்டில் இன்னொரு படத்தை கொடுக்க இரண்டு நடிகர்களும் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் அஜித் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் லியோ திரைப்படத்தில் இரவு பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்பொழுது மக்களுக்கு விருந்து கொடுத்து வருகிறது
அதிலும் குறிப்பாக துணிவு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான முதல் இரண்டு வாரங்களில் டாப் 10 இடத்தை பிடித்திருந்தது. இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்களும் எந்தெந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. துணிவு படம் முதலிடத்திலும் வாரிசு படம் இரண்டாவது இடமும் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.