Rajini : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம். ஆகஸ்ட் 10ஆம் தேதி சுமார் 4000 – திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 14 நாட்கள் முடிவில் 550 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறைய போவதில்லை என கூறப்படுகிறது. தற்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து வரும் ரஜினி. ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் நடித்த தலைகாட்டி உள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருந்த ரஜினி 1978 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 21 படங்களில் நடித்துள்ளார்.
அந்த ஒரு வருடத்தில் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார். இந்த 21 படங்களில் அவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை என பல கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி உள்ளார் அதில் இவர் நடித்த காளி படம் வெளிவந்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
இந்த சாதனையை இனி நடிகர் ரஜினியே நினைத்தாலும் முறியடிக்க முடியாது மற்ற நடிகர்களாலும் இனிமேல் முறியடிக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.