சினிமா எப்படி புதியதை நோக்கி ஓடுகிறது அதேபோல புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதியதை காட்ட நடிகர் கமல் அதிகம் ஆசை படுவது வழக்கம். அதை அவரது பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதையே தொடர்ந்து செய்ய கமலும் விரும்புகிறார் அதனால் கமலின் வருகின்ற ஒவ்வொரு படத்திலும் புதுப்புது விஷயங்களை நீங்கள் பார்க்கலாம்.
கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தற்போது ஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது புதிய படங்கள் திரையரங்கில் வெளிவந்தாலும்..
விக்ரம் படத்திற்கான மவுசு குறையாமல் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் பார்த்து வருகின்றனர்.ஒரு பக்கமும் கதைகளும் சூப்பராக இருந்தாலும் மறுபக்கம் நடிகர்கள் சூப்பராக இந்த படத்தில் நடித்து உள்ளனர் அந்த வகையில் கமலை தொடர்ந்து சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஏஜென்ட் டினா என அனைவரும் நடிப்பும் சூப்பராக இருந்தது.
இதனால் தொடர்ந்து ஓடுகிறது மேலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதனால் பல்வேறு இடங்களிலிருந்து ஷேர் மட்டுமே கோடிகணக்கில் வருவதால் படக்குழு லாபத்திற்கு மேல் லாபம் பார்த்து வருகிறது.
தற்பொழுது வரை கமலின் விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி ஒரு மிகப்பெரிய சாதனையை விக்ரம் படம் நிகழ்த்தும் என்பது படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் தொடங்கி பலரின் கணிப்பாக இருக்கிறது.