பொதுவாக சீரியல் ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வில்லி கேரக்டரில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோட மட்டுமல்லாமல் முன்பெல்லாம் சீரியலில் நடித்த பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவார்கள் ஆனால் தற்பொழுது சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு அதன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நடிகர், நடிகைகள் ஏராளமானவர்கள் இருக்கிறாரகள்.
ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ஸ்வாதி ராயல். இந்த சீரியலில் கண்மணி என்ற வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருந்தார். மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து வருகிறது.
சீரியல் நடித்து வரும் இப்ப சமீப பேட்டி ஒன்றில் ஆன்மீக அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்வாதி,’நான் நடிக்க வருவதற்கு முன் படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்க்கு சென்று விட்டேன் என் பெற்றோர் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்ற வேண்டிக் கொண்டு விபூதி வைத்தனர்.
அதன் பிறகு தான் எனக்கு உடல் நலம் சரியானது ஷீரடி சாய்பாபா எனக்கு புது வாழ்க்கையை கொடுத்தார் என்று சுவாதி கூறியுள்ளார்’. இவர் பெங்களூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சென்னைக்கு வருவதற்கு முன்பே மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு 5 வருடங்கள் மாலை போட்டு வந்துள்ளாராம்.
தற்பொழுது அவர் வீட்டில் 20 சாய்பாபா சிலைகள் இருக்க, தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அவர் வாழ்வில் கடவுளை நல்லாசி கிடைக்க வேண்டும் என பாபா சிலையை பரிசாக கொடுத்து வருகிறாராம். மேலும் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.