‘தளபதி 67’ படத்தில் பணி புரிவதற்கான வாய்ப்பு.! கோவை போலீசார்களின் அறிவிப்பு..

vijay
vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் இணை இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கோவை போலீசார் கமிஷனர் பாலகிருஷ்ணன் தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளார்கள்.

அதாவது சில வருடங்களாக தமிழகத்தில் போதைப் பொருள் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே தமிழக போலீசார்கள் தொடர்ந்து போதை பொருளை ஒழிப்பதற்காக தீவிரமாக போராடி வருகிறார்கள். எனவே இது குறித்து மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளிலும் இறங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது கோவை போலீஸார்கள் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து குறும்படம் போட்டி ஒன்றை நடத்த இருக்கிறது அதாவது போதை தடுப்பு விழிப்புணர்வு என்ற டைட்டிலில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கும் ஒரு குறும்படத்தினை உருவாக்க வேண்டும் மேலும் அந்த படம் அக்டோபர் 20ம் தேதிக்குள் கோவை போலீசர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

balakirushnan
balakirushnan

இந்த போட்டியில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமே இதில் பங்கு பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து உதவியக்குனராக பணி புரிவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கோவை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தினை உருவாக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் இவ்வாறு இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் இந்த படத்தில் அந்த நபர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.