பிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு.? கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.? வருத்தத்தில் விக்னேஷ் சிவன்.

nayanthara
nayanthara

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தான் பெரிதும் நம்பி  இருந்தார். தமிழில் டாப் நடிகர் சரத்குமாருடன் இணைந்து “ஐயா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் படமே  இவருக்கு அதிரிபுதிரி ஹிட் அடிக்க அடுத்த அடுத்த டாப் நடிகர் படங்களும் வெகுவிரைவிலேயே கிடைத்தன.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி திரைபடத்தில் நடித்தார் இப்படி ஒவ்வொரு டாப் நடிகர்கள் முதல் படத்தில் வெற்றியை கொடுத்தால் இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து சினிமாவிலும் தற்போது கொடிகட்டி பறந்து வருகிறார்.

சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், நிழ வாழ்க்கையில் காதல் கிசுகிசுவில் அவ்வபோது மாட்டிக்கொண்டு சின்னாபின்னம் ஆனாலும்  இவரது அழகில் யாராவது ஒருவர் மயங்கி விடுவார்கள் அந்த வகையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாராவின் அழகு மற்றும் திறமையில் விழுந்தார் விக்னேஷ் சிவன்.

அன்றிலிருந்து தற்போது வரையில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் வருகின்றனர் ஆனால் திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதற்கு  ரசிகர்களும் நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கூறினார். அதுபோலவேதான் நயன்தாராவின் அப்பாவும் நயன்தாராவை அடிக்கடி திருமணம் செய்துகொள்ள ஆனால்அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த நயன்தாராவுக்கு சமீபத்தில் ஆதிர்ச்சியான செய்தி கிடைத்தது.

அதாவது அவரது அப்பாவின் உடல்நிலை மேலும் குன்றியதால் வெகு விரைவிலேயே திருமணம் செய்துகொள்ள ரெடியாக இருந்தார் ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அட்லி தற்பொழுது ஷாருக்கானுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளார் இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க அனுகி உள்ளார் அட்லி இதனால் சந்தோஷத்தில் இருந்து வருகிறார் நயன்தாரா.

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன நயன்தாராவுக்கு தற்போது பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபிக்க அதிக ஆசைப்படுகிறார் அதன் காரணமாக இனி இரண்டு வருடங்களுக்கு கல்யாணம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது என விக்னேஷ் சிவனுடன் கூறியுள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் நயன்தாரா எங்கு செல்கிறார் அங்கு பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு சொல்ல ரெடியாக இருக்கிறார் இயக்குனர்.