நம் தமிழகத்தில் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் வேலைக்கு போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இவர்களின் எதிர்காலத்திற்காக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார் இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து இடைநிலை மாணவர்களும் வேலையில் இருக்க வேண்டும் என்றும் தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இலவச மடிக்கணினி, சீருடைகள், காலனி, மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும் என்றும் இடைநிலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 8வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இடைநிலை மாணவர்களிடம் அவர்களைப் பற்றிய விவரங்களை குறுகிய காலத்தில் சேமிக்கவேண்டும் என்று உத்தரவலித்துள்ளார் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.