சூர்யா – பாலா இணையும் படத்தில் பிரபல பெண் இயக்குனருக்கு வாய்ப்பு.! யார் அது தெரியுமா.?

surya and bala
surya and bala

தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்கள் வெகு சிலரே உள்ளனர் அவர்களில் ஒருவராக தற்பொழுது பார்க்கப்படுபவர் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா. முதலில் இவர் ரித்திகா சிங் மாதவன் ஆகியோரை வைத்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதன் பின் இவர் சூரரைப்போற்று என்னும் மாபெரும் படத்தை கொடுத்து தன்னை சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய முன்னணி இயகுனராக காட்டி கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகருடன் கதையை கூறி வருகிறார் ஆனால் எந்த படத்திலும் எடுப்பாடு இல்லை..

இந்த நிலையில் ஹிந்தியில் சூரரைப்போற்று ரீமேக் பணிகளை தற்போது செய்து வருகிறார்.இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்த படத்தில் பணியாற்றி வருகிறார் அந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவா என கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எடுத்துரைக்கும் திரைப் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலா – சூரியன் இணைந்தாலே மிகப் பெரிய ஒரு நட்சத்திர கூட்டணியாக பார்க்கப்படும் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் பெண் இயக்குனர் சுதா கொங்கரா நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிய இருப்பதாகவும் தெரியவருகிறது இந்த பணியை முடித்து விட்டு தான் ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக் பணியை தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.