நடிகர் சிம்பு மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளை நோக்கி நகர்ந்து உள்ளது.
இது இப்படி இருக்க மறுபக்கம் நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், joe malloori , சௌந்தரராஜா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே தென்படாமல் இருந்த இவர் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்துள்ளார். பெரிய அளவில் இந்த படத்தை அவர் எதிர்நோக்கி இருக்கிறாராம். அதற்கு ஏற்றார் போலவே இயக்குனரும் அவருக்கு ஒரு சூப்பரான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளாராம்.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு புதிய லுக்கில் நடித்துள்ளார் இருப்பது போல ட்விட்டர் ஃபோட்டோ பகிரபட்டு உள்ளது. ஆனால் அவரது கேரக்டரை பற்றி இன்னும் தெளிவாக எந்த தகவலும் வெளிவரவில்லை. நிச்சயம் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு ஆகியோர் சந்திக்கும் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படம் சிம்புவுக்கும் சரி கௌதம் கார்த்திக்கும் சரி சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனை படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பத்து தல படத்திற்கு முன்பாக நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.