பள்ளிக்கூடம் படிக்கும் போதே காதல்.. முதல் முத்தம் எப்போது யாருடன் தெரியுமா.? வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஓப்பனாக பகிர்ந்த லாஸ்லியா.

losliya-
losliya-

சினிமாவில் பயணித்து வரும் பெரும்பாலானோர் முதலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி பின்பு சினிமாவில் கால் தடம் பதித்தவர்கள். அதற்கு வழிவகை செய்கின்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.  சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிறகு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் முதல் திரைப்படமாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுல் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி மக்களை சென்றடைந்தது அதைத் தொடர்ந்து இந்த படம் கூடிய விரைவில் வெளிவரும் என தெரியவருகிறது.  இந்த நிலையில் ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் லாஸ்லியா தனது ரிலேஷன்ஷிப் மற்றும் முதல் முத்தம் குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதில் “என் முதல் காதல் பள்ளியில்தான் ஏற்பட்டது. அதுவும் ஒருதலைக் காதல்தான் அந்தப் பையனுக்குக் கூட இப்ப திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவர் எனக்கு கொடுத்தது”  என்று அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஓப்பனாக கூறியுள்ளார்.