சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் என்றால் அது வாரிசு திரைப்படம் தான் இந்த திரைப்படம் 11ஆம் தேதி வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை மிக விறுவிறுப்பாகவும் ரசிகர்கள் கூட்டம் நெரிசல் அதிகரிக்கும் அளவிற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டும் இருக்கிறது.
மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் ஒரு இஸ்லாமிய பெண் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் வாரிசு திரைப்படத்தை பார்த்த இஸ்லாமிய பெண் ஒருவர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் வாரிசு விஜய் தான் என்று அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அங்கு நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம் என்று அவர் பேசி இருந்தார்.
இவ்வாறு பேசிய அந்த பெண்மணி திடீரென சமூக வலைதள பக்கத்தில் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தங்களுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த பதிவை பார்த்த மூடர் கூடம் இயக்குனர் நவீன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் அவர் கூறியது என்னவென்றால் இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டு விஜய்க்காக நாங்கள் நிற்போம் என்று சொன்ன பெண்ணை தனக்காக கூட இருக்க முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆன் அதிகம் இஸ்லாமியர் இடத்திலிருந்து ஒழிய வேண்டும்.
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
pic.twitter.com/sYofBTgv5Y— DirectorNaveen (@NaveenFilmmaker) January 12, 2023
இறைவனுடைய படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் அந்த வகையில் பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்ற கேள்வியை இது மட்டும் இல்லாமல் அவர்களுக்கும் உணர்வுகளும் உரிமைகளும் உண்டு இதனை ஆண்கள் உணர வேண்டும் என்று இது மட்டும் இல்லாமல் அவர்கள் கல்வியும் பகுத்தறிவியையும் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.