விவேக் சாருடன் மட்டும் கடைசிவரை நடக்கவே முடியவில்லை.! கண்ணீருடன் இளம் நடிகர் கதறல்.

vivek1
vivek1

தற்பொழுது திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒன்று நடிகர் விவேக்கின் மறைவு.  தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விவேக்.

இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காத ஒருவர். இவர் இயக்குனர் பாலச்சந்திரனுக்கு துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் பாலச்சந்திரன் அவர் இயக்கும் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த விவேக் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 4:45 மணி அளவில் இயற்கை எய்தினார். எனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உட்பட அனைவரும் இவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக்கின் மரணத்தை தாங்க முடியாமல் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வருத்தத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கடைசிவரையிலும் விவேக் சாருடன் இணைந்து என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

sivakarthikeyan-tweet
sivakarthikeyan-tweet

மூத்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று தனது மனம் வருந்தி மிகவும் நெகிழ்ச்சியான தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.