திரை உலகில் டாப் நடிகர்கள் முதலிடத்தைப் பிடிக்க மோதிக்கொள்வது வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது எம்ஜிஆர் -சிவாஜி, ரஜினி – கமல் -விஜயகாந்த், அஜித் – விஜய் என மோதிக் கொண்டு தான் வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் சோலோவாக வெளியாகி இருக்கின்றது ஆனால் 80 – 90 காலகட்டங்களில் அப்படி கிடையாது.
ஒரே நேரத்தில் மோதிக் கொள்வார்கள் அதிலும் குறிப்பாக ரஜினியும், விஜயகாந்தும் பல முறை சினிமாவின் மூலம் நேருக்கு நேர் மோதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ஹீரோவாக தனது பயணத்தைத் தொடர்ந்த காலத்தில் இருந்து இப்போது வரையிலும் வசூல் வேட்டை நடத்தும் ஒரு ஹீரோ. அவரது படம் திரையரங்கில் வெளியானால் அந்த படத்தை ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.
மேலும் படம் சூப்பர்ஹிட் அடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ரஜினியின் திரைப்படங்கள் ஏ மற்றும் பி சென்டரில் அதிகம் வசூல் செய்யும் அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் சிட்டி செடன்டர்களில் ரஜினியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் விஜயகாந்துக்கு பி மற்றும் சி எனப்படும் நகர மற்றும் கிராம புறங்களில் அவரின் திரைப்படங்கள் வசூலை வாரிக் குவிக்கும்.
அப்படி ஒருமுறை ரஜினியின் பணக்காரனும், விஜயகாந்தின் புலன்விசாரணை படமும் ஒன்றாக வெளியாகியது இதில் புலன் விசாரணை படம் பி மற்றும் சி சென்டர்களில் அதிக வசூலைப் பெற்றது ரஜினியின் பணக்காரன் திரைப்படம் எ, பி சென்டரில் சிட்டி பகுதியில் வசூலை அள்ளியது. இப்படி இருவரும் மோதிக் கொண்டிருக்கும் போது திடீரென நடிகர் ராமராஜன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த மற்ற நடிகர்களை மிரள வைத்தார்.
அப்போது ஒரு தடவை ரஜினியின் படம் ராமராஜன் படமும் ஒன்றாக வெளியாகியது இதில் ராமராஜன் படம் நல்ல வசூலை பெற்று அசத்தியது இதை பார்த்த ஒரு சிலர் ரஜினியிடம் போய் கூறி உள்ளனர் அதற்கு இது எல்லாம் சும்மா இது தற்காலிகமானதுதான் என் வசூலை ராமராஜன் ஆல் அடிக்க முடியாது பி மற்றும் சி சென்டரில் என் படங்களை விட அதிக வசூல் பெறுவது விஜயகாந்த் படம் என அவர் ஒப்புக்கொண்டார்.