தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை நம்பர்-1 நடிகையாக தக்கவைத்துக் கொண்டு வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து சினிமாவில் ஜொலித்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது அவரது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது.
ரசிகர்களின் எண்ணத்தை போக்கும் வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பல வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
அதே சமயம் இவர்கள் இருவரும் திருப்பதியில் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இடத்தை மாற்றி உள்ளனர் மகாபலிபுரம் அருகே உள்ள பை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஜூன் 9ம் தேதி அதிகாலை 5 இருந்து 7:30 மணி வரைமுகூர்த்த நேரம். விக்கி – நயன்தாரா கல்யாணத்திற்கு உறவினர்கள் குடும்பத்தினர்கள் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வர உள்ளனர்.
மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது சினிமா பிரபலங்களான சிலருக்கு மட்டுமே அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக அஜித் – விஜய் மற்றும் நயன்தாராவுடன் நெருக்கமான சில பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமந்தா, விஜய் சேதுபதி அவர்கள் இருவரும் அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்துள்ளத்தால் கல்யாணத்தில் இவர்கள் இருவரும் முக்கியமாக கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.