பொதுவாக சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் எந்த நடிகராக இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைவது வழக்கம். அந்த வகையில் தற்போது தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கும் சில தோல்வி திரைப்படங்கள் உள்ளது.
பொதுவாக இவர் நடிப்பில் வரும் திரைப்படங்கள் தமிழகத்தில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் இந்திய அளவில் எப்போதும் வெற்றியை பெற்று விடும் ஆனால் தற்போது இவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக சமீபத்தில் வரும் சில படங்கள் சொல்லுமளவிற்கு வெற்றியை தரவில்லை.
ஆனால் ரஜினிகாந்துக்கு தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 100கோடி என்பதால் அவர் தொடர்ந்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பேட்ட, தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் தான் பெரும் தோல்வியை தழுவியது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சிவா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்துள்ளது இன்னும் டப்பிங் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தான் ரஜினி முழுமையாக நம்பி உள்ளார் கண்டிப்பாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று கூறி உள்ளார்கள். இவ்வாறு முன்னணி நடிகர்கள் தோல்வி திரைப்படங்களை தந்தாலும் தப்பித்து மற்ற திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் தோல்வியடைந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த சில நடிகைகள் இவர்களுக்கு என்று இறந்த மொத்தம் மார்க்கெட்டை இழந்தவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சிங்கா தனது 33 வயதில் நடிகர் ரஜினி உடன் இணைந்து லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு சோனாக்ஷி சின்கா கோலிவுட் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று மறுத்து வருகிறாராம். ஏனென்றால் இவர் லிங்கா திரைப்படத்தில் நடித்து கொலிவுட்டில் பிரபலம் அடைந்து விடலாம் என்ற ஆசையுடன் வந்துள்ளார்ல். ஆனால் பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தால் நடிகைகளுக்கு பெரிதாக பிரபலம் கிடைக்காது எனவே பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.