ஒரே ஒரு படம் ..நயன்தாராவின் மார்க்கெட்டை சுக்குநூறாக உடைக்க ரெடியான சமந்தா.

nayanthara-and-samanatha
nayanthara-and-samanatha

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லி. தோல்வியை கொடுக்காத இயக்குனர்களில் ஒருவராக தற்போது இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரது படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் .

இவர் தற்போது தமிழ் நாட்டை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்களை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் முதல் முறையாக இந்தி பக்கம் டாப் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க ஒப்பந்தமாகியிருந்தார்.இந்த படத்தில் முதலில் நயன்தாரா, யோகி பாபு போன்ற பலர் நடிக்க கமிட்டாகி  புனேவில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது.

அதைத் தொடர்ந்து படக்குழு வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்த போனது ஆனால் இதற்கிடையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் மாட்டியதால் ஷாருக்கான் உடனடியாக தாயகம் திரும்பி தனது மகனை உடனடியாக மீட்டு விடலாம் என முனைப்பு காட்டினார். ஆனால் இந்த பிரச்சினை பெரிதானதால் படம் சில மாதங்கள் எடுக்க முடியாது என தெரியவந்தது.

இதனை எடுத்து ஷாருக்கான் படத்தில் கமிட் ஆன நயன்தாரா அதில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் நயன்தாரா இந்த படத்தையும் தாண்டி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். தற்போது சில மாதங்கள் கழித்து இந்த படத்தில் நடிக்க வந்தால் கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக இந்த படத்தில் இருந்து நைசாக கழண்டு உள்ளார்.

அப்பொழுது அவருக்கு பதிலாக இயக்குனர் அட்லி மற்றும் படக்குழு யோசித்து நடிகை சமந்தாவை படத்தில் கமிட் செய்யலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. நடிகை சமந்தா சமீபத்தில் தமிழன் டிவி சீரியலில் நடித்து இருந்தார் இது ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது அவரை கமிட் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என படக்குழு யோசித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.