ஒரே ஒரு படம் தான் கமலின் வாழ்க்கையை மாறிபோச்சு..! இந்தியன் 2 படத்திற்காக வாங்கும் “சம்பளம்” எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

உலக நாயகன் கமலஹாசன்  சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரமும்  கொடுத்தாலும் பயப்படாமல் நடிக்க கூடியவர் அதை பல படங்களில் நாமே பார்த்திருக்கிறோம்.. சினிமா தான் வாழ்க்கை என இருந்து வந்த உலகநாயகன் திடீரென அரசியல் பிரவேசம், வியாபாரம் போன்றவற்றிலும் தலைகாட்டியதால் கடந்த நான்கு வருடங்களாக சினிமா உலகில் நடிக்காமலே இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ஒரு தரமான கதையை உருவாக்கி கமலிடம் சொல்ல அது ரொம்ப பிடித்துப்போகவே அந்த  படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் பிராமண்ட பட்ஜெட்டை போட்டு படத்தையும் தயாரித்தார். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் என மிகப் பெரிய டாப் நட்சத்திரம் நடிகர்கள் நடித்தனர்.

ஒரு வழியாக படம் வெளிவந்து விமர்சன ரீதியாக அடித்து நொறுக்கியது.. அதன் காரணமாக வசூலில் விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது இந்த படத்திற்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து இந்த படத்தில் விபத்துக்கள் ஏற்பட்ட அதன் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் லைகா நிறுவனம் தலையிட்டு பிரச்சனையை முடித்து மீண்டும் தற்போது ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது கமலும் இந்தியன் 2 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்திற்காக கமல் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்த்தையில் இந்தியன் 2 படத்திற்காக கமல் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை தற்போது திரை உலகில் இருக்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் திரை உலகினர் பலரும் விக்ரம் படம் கமலின் வாழ்கையே மாற்றிவிட்டது எனக் கூறி சொல்லி வருகின்றனர்.