சிம்புவை பார்த்தாலே தெறித்து ஓடும் இயக்குனர்கள் மத்தியில் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் STR – க்கே பயத்தை காட்டிய சம்பவம்.. வெளிவந்த சுவாரசிய தகவல்

simbu
simbu

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவர் கடைசியாக நடித்த மாநாடு வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற மார்ச் 30ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக சிம்புவின் பழைய மற்றும் புதிய செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை இயக்குனர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறார் என்பதை பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன ஆனால் அப்படிப்பட்ட சிம்புவுக்கு ஒரு இயக்குனர் பயத்தை காட்டி உள்ளார் அது குறித்து பார்ப்போம்…

சமீபத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சிம்பு பற்றி பேசி உள்ளது என்னவென்றால்.. கடந்த 26 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் சிம்புவை வைத்து சரவணன் என்னும் படத்தை இயக்கினார் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கிய இரண்டு நாட்கள் சிம்பு காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்கு வந்தாராம் மூன்றாவது நாள் சிம்புவை அழைத்து பேச ரவிக்குமார் நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் நீ வேறு யாரையாவது வைத்து படத்தை இயக்கி கொள் நான் தயாரிப்பாளரிடம் கூறி விலகிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.

சிம்பு, சார் ஏன் சார் இப்படி சொல்றீங்க என கேட்க.. நான் ஏழு மணியில் இருந்து உனக்காக ஷாட் வச்சுக்கிட்டு காத்துகிட்டு இருக்கேன் ஆனா நீ 11:00 மணிக்கு வருகிறாய் இனி 11 மணிக்கு தான் வருவாய் என்றால் என்னிடம் முதலில் கூறிவிடு நான் அதற்கு ஏற்றார் போல திட்டமிட்டு கொள்கிறேன்.

இந்தப் படத்தை நான் மிக விரைவில் முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என கூறியிருக்கிறார் அதன் பிறகு சிம்பு அடுத்த நாளிலிருந்து தான் படப்பிடிப்பிற்கு வரும் நேரத்தை ரவிக்குமாரிடம் கூறி விடுவாராம் அதற்கு ஏற்றார் போல் அவரும் படத்தை திட்டமிட்டு எடுப்பாராம்.. சரவணா படத்தின் ஷூட்டிங் இப்படித்தான்    எடுக்கப்பட்டதாக கே எஸ் ரவிக்குமார் பேசி உள்ளார்.