தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு கிடைக்கவில்லை என்றால் முதலில் கைவைப்பது பழைய திரைப்படங்களில் தான். அதற்கும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெற்று தான் தலைப்பை வைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அதுவே பெரிய பிரச்சினை ஆகிவிடும்.
அந்தவகையில் ஒரு சிலரோ படத்தின் தலைப்பை கொஞ்சம் மாற்றம் செய்து வைத்துக்கொள்வார்கள் உதாரணத்திற்காக எங்கள் வீட்டுப்பிள்ளை என்ற தலைப்பில் நம்ம வீட்டுப் பிள்ளையாக மாறியது அதேபோல காவல்காரன் என்ற படத்தலைப்பு காவலன் எனவும் மாறியது இதே போன்ற பல திரைப்படத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் ஒருசிலர் ரஜினிகாந்தின் பட தலைப்பை வைப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள் ஏனென்றால் அது பெரும்பாலும் ஹிட்டடித்த தலைப்பாக தான் இருக்கும் ஒருவேளை படம் தோல்வி அடைந்து விட்டால் பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் ரஜினி பட தலைப்பை பயன்படுத்திக்கொள்ள உரிமை பெற்ற ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் தான் இதற்கு முன்பாக ரஜினியின் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை பொல்லாதவன் படிக்காதவன் போன்ற பல திரைப்பட டைட்டிலையும் தனுஷ் பயன்படுத்தியுள்ளார்.
அதே போல இவர் அந்த தலைப்புகளில் நடித்ததற்கு இதுவரை எந்த ஒரு விமர்சனங்களையும் பெற்றது கிடையாது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரஜினியின் மருமகன் என்பதே காரணம் ஆகையால் தலைப்பை மாற்றம் செய்யாமல் அப்படியே பயன்படுத்திக்கொண்டார்.
இதனால் பல நடிகர்களும் இவர் மீது பொறாமை கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் தனுஷ் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தோல்வியை சந்தித்து வருகிறது அந்தவகையில் அசுரன் திரைப்படத்திற்கு எதிராக எந்த ஒரு ஹிட்டான திரைப்படமும் வெளியாகவில்லை.