சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை மிக பெரிய பொருட்செலவில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் பல தடைகளையும் தாண்டி ஒருவழியாக திரை அரங்கிற்கு கொண்டு வந்து அசத்தியுள்ளார் தயாரிப்பாளர்.
இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஆம் கிட்டத்தட்ட 900 திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கிறதாம் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கல்யாணி பிரியதர்ஷின், பிரேம்ஜி, கருணாகரன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் குறித்து ஒவ்வொருவரும் தனது அனுபவத்தைக் கூறி வந்த நிலையில் அண்மையில் இசை விழாவில் இயக்குனர் வெங்கட்பிரபும் படம் குறித்தும், சிம்பு குறித்தும் அவர் கூற வருவது : நடிகர் சிம்புக்கும் உடன் மிகப்பெரிய ஒரு பிணைப்பு உள்ளது. சிலர் சொல்வது போல அவர் மோசமான மனிதர்கள் கிடையாது. திறமையான நடிகர் படப்பிடிப்பு தொடங்கிய உடன் அவர் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்வார்.
மேலும் அவருடைய உடலை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளேன் அந்த அளவிற்கு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார். ஆள் குண்டாக இருந்த மனுசன் உடல் எடையை குறைக்க மூன்று அல்லது நான்கு மாதங்கள்தான் எடுத்துக்கொள்கிறார் அதுவே ஆச்சரியமாக இருக்கு ஒரு நண்பராக சிம்புவை பற்றி எனக்கு சில ரகசியம் தெரியும்.
ஆனால் அதை சொல்ல மாட்டேன் ஏனென்றால் அது சொல்லாத வரையில் தான் ரகசியம் சொன்னால் அது ரகசியமாக இருக்காது எனவே நான் சொல்ல மாட்டேன் என கூறினார் மேலும் படம் தாமதமாக வந்தாலும் வெற்றியை எதுவும் தடுக்க முடியாது தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக மாநாடு இருக்கும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.