தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதால் நெல்சன் திலீப் குமாரின் பயணம் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறது. மேலும் டாப் நடிகர்கள் கூட இவரது கதையை கேட்டு நடிக்க ரெடியாக இருக்கின்றனர்.
முதலாவதாக விஜய்க்கு கதையை சொல்லஅது பிடித்துப்போகவே.. தளபதி விஜய் உடன் முதல் முறையாக நெல்சன் திலீப் குமார் கைகொடுத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட ஒரு வழியாக முடிந்தது அடுத்ததாக டப்பிங் பணிகள் தொடங்க ரெடியாக இருக்கிறது.
பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் அசத்தி உள்ளனர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க வித்யாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்ற சிறந்த இயக்குனர்களுடன் கலந்து கொண்டு பேட்டி ஒன்று கொடுத்தார் அப்பொழுது நெல்சன் பேசியது : நமக்கு பிடித்த மாதிரி படத்தினை எடுக்க ஹீரோக்கள் ஒதுக்க மாட்டார்கள் நமக்கு ஒரு ஸ்டைல படத்தை எடுக்க வேண்டியிருக்கும் என கூறினார் பக்கத்திலிருந்த விக்னேஷ் சிவன் சுதா கொங்கரா போன்ற இயக்குனர்கள் திடீரென அவரை பார்த்து சிரித்ததோடு மட்டுமல்லாமல் அவசர போட்டுட்டியே குமாரு எனக்கூறி கலைத்தனர்.
நெல்சன் இதுவரை எடுத்த படங்களை மூன்று தான் ஒன்று கோலமாவு கோகிலா இன்னொன்று டாக்டர் இப்ப பீஸ்ட் ஆகிய மூன்று படங்கள்தான் இதில் எந்த ஹீரோவை அவர் மறைமுகமாக சொல்லுகிறார் என்று தான் புரியவில்லை..
நெல்சன் அவர்கள் நமது ஜோசப் அண்ணாவை ஒத்த பற்றி கூறிய போது😂😂
#Valimai️ pic.twitter.com/Oiybjgl6og— мя 𝑻𝒐𝒎™| ᵛᵃˡⁱᵐᵃⁱ (@iam_tom11) January 15, 2022