தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தொடர்ந்து டாப் ஹீரோக்கள் மற்றும் சோலோ படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி கண்டு வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒரு பக்கம் கமிட்டாகி நடித்து வந்தாலும் மறுபக்கம் ஏழு வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை ஒருவழியாக ஜூன் 9ஆம் தேதி உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்டபிறகு திருப்பதி கேரளா என சுற்றி திரிந்த இந்த ஜோடி திடீரென ரகசியமாக ஹனிமூனுக்கு புறப்பட்டது. தற்போது விக்கி நயன்தாரா ஜோடி தாய்லாந்தில் முக்கிய இடங்களை சுற்றி பார்த்து தனது பொழுதை கழித்து வருகிறது. புகைப்படங்கள் கூட தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது .
இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவை பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் தற்பொழுது அனைவருக்கும் தெரியும்படி வெளியாகியுள்ளது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இடது கையில் மொத்தம் ஆறு விரல்கள் இருக்குமாம்
லட்சத்தில் சிலருக்கு மட்டுமே அமையும் விஷயம் நயன்தாரா கையில் உள்ளது என்று பலரும் கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.