தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
இவ்வாறு இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாகவும் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் எனவே தளபதி 67 படத்தின் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்போது வரையிலும் இந்த படத்தினை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளிவராத நிலையில் இருந்தாலும் ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தில் மொத்தம் மூன்று விலங்கள் நடிக்க இருக்கிறார்களாம் மேலும் இந்த படத்தின் நடிக்க இருக்கும் மூன்று நடிகர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் நடித்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் தற்போது இந்த படத்தில் உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தின் நடிப்பதற்காக இவருக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் மேலும் இரண்டு வில்லன்கள் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.