இப்படி வந்துட்டு அப்படி போக கோடியில் சம்பளமா.? கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டிய சிம்பு

simbu
simbu

Simbu  : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் 50 கோடியில் இருந்து 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு சில நடிகர்கள் கெஸ்ட் ரோல்களில் நடித்து பல கோடி சம்பளமாக அள்ளுகின்றன அப்படி ஒரு நடிகர் ஒரு நிமிடம் நடித்து ஒரு கோடி சம்பளம் வாங்கிய சம்பவத்தை பற்றி தான்..

நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம் தமிழ் சினிமா உலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், நடன கலைஞராகவும் தனது திறமைகளை வெளிகாட்டி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர் சிம்பு இவர் தற்பொழுது நடிக்க ஒரு படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஒரு படத்தில் ஒரு நிமிடம் நடிகர் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார். கே எஸ் மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம், சேதுராமன், பவர் ஸ்டார், கோவை சரளா போன்றோர் நடிப்பில் உருவான திரைப்படம் கண்ணா லட்டு திங்க ஆசையா.. படம் வெளிவந்து விமர்சனம் ரீதியாவுகம், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது.

இந்த படத்தில் சிம்பு ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பார் அதுவும் கொஞ்ச நேரம் தான் வந்து போவாரு அதற்காக மட்டுமே அவர் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அந்த சமயத்தில் மார்க்கெட்டிங் உச்சியில் சிம்பு இருந்தார்.

ஆனால் அதன் பிறகு ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக மாறியதால் மார்க்கெட் இறங்கியது தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த தகவல்  சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிய வருகிறது.